Saturday, January 30, 2010

தமிழ்ப்படம்

தமிழ்ப்படம்
நடு நிசிக்காட்சி இரவு 12 மணிக்கு அரங்கேறியது
படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றியது
அணைத்து படங்களையும் நக்கல் நையாண்டி செய்தது மிகவும் நன்றாக இருந்தது
ஆனால் தியேட்டரில் பார்க்கும் அளவிற்கு ஒன்றும் பெரிதாக இல்லை DVD இல் பார்க்கலாம்.

Thursday, January 28, 2010

ஈழத்து அதிபர் தேர்தல்

பொன்சேகா ராஜபக்க்ஷே இடையிலான போட்டியில்
தோற்றது தமிழினம் தான்
மீண்டும் பாழாய் போன நப்பாசை நாசமாய் போனது
ஒன்று மட்டும் நன்றாக புலப்படுகிறது
தமிழன் என்றும் கூலி சமுதாயமாக தான் இருந்து சாவான்
என்றும் ஆளும் பொறுப்புக்கு வர முடியாது
உலகை ஆளும் அளவிற்கு தமிழன் தன்னை தயார் படுத்திக்கொள்ளும்
திறனை வளர்க்க வேண்டும் இல்லையேல் எந்த ஊர் சென்றாலும் கொத்தடிமை தான்

எல்லாமே ஒரு நம்பிக்கை தான்

கடவுள் இருக்கிறானா இல்லையா
இன்னார் தான் உங்கள் தந்தை என்று எப்படி நம்புகிறீர்கள்?
அன்னை சொல்லி தானே
மரபணு சோதனை செய்து அதை நிரூபிக்கலாம்
ஆனால் மரபணு சோதகரை நம்ப வேண்டுமே
எல்லாவற்றிற்கும் அடிப்படை நம்பிக்கை தான்
நான் தான் இதை எழுதினேன் என்று எப்படி நம்புகிறீர்கள்

Wednesday, January 27, 2010

பச்சை

சமீபத்தில் நான் மிகவும் ரசித்த பாடல் தமிழ் படத்திலிருந்து
பச்சை மஞ்ச ஆரஞ்சு தமிழன் நான்
கோலிவுட் ஹீரோக்களை செருப்பால் அடித்தது போல் இருந்தது
இதோ போன்ற பாடல்களும் படங்களும் வந்தால் மாஸ் ஹீரோ எல்லாம் ஆஸ் ஹீரோ ஆகிவிடுவார்கள் கூடிய விரைவில்
அப்புறம் நல்ல படத்துல நடிச்சா தான் பொழைக்க முடியும் இல்லடி ஊர் பக்கம் பொட்டி கடை தான் வெக்கணும்
இறைவா தமிழ் நாட்டையும் மக்களையும் நீ தான் காப்பாத்தனும்
நல் இரவு 

மாநகராட்சியில் ஆள் குறைப்பு

கடற்கரையில் குப்பை அப்புறப்படுத்தல்
பள்ளி கல்லூரி சிறுவர்களின் இருப்பால்

Sunday, January 24, 2010

தொடுவானம் தொட்டேன் இன்று

எப்பொழுது நினைத்தாலும் வந்து செல்கின்ற கனவுகள் நம் ஆசைக்கு நினைத்தால் பகல் மற்றும் இரவு
பிடித்த வாசத்தில் நிறத்தில் பூக்கள்
தெளிந்த நீரோடைகள் வருடும் காற்று
மற்றவர் எண்ணங்களை அறியும் திறன்
யாரையும் பார்த்த உடன் எடை போடும் திறன்
எண்ணற்ற செல்வம் குடுத்து குறையாத அளவிற்கு பணம்
மிக மிக பெரிய வீடு சிப்பந்திகள் காரியதரிசிகள்
பஞ்சம் என்று வரலாறாகபட்ட வார்த்தை

மட்டற்ற இன்பம்
இவை அனைத்தும் கானல் நீர் எனும் சுனாமி அடித்து சென்றது விழிக்கும் பொழுது

Saturday, January 23, 2010

சிந்தனை திருட்டு

நான் எடுத்த வாந்தியை
உரிமையோடு நீ அள்ளி பருகி செரிக்கின்றாய்
பெருமையோடு சொல்கின்றாய் அது நீ சமைத்ததென்று

கொசு

மனிதன் தான் நோயின்றி வாழ பல கொலைகள் செய்யவேண்டியிருக்கிறது
 

நிதர்சனம்

அடுத்தவர் தலை தூக்கும் போதெல்லாம் மிதிப்பதென்பது
இப்பொழுது எல்லோராலும் ஏற்கப்படும் நிலை ஆகிவிட்டது
அடுத்தவரை அழித்தால் தான் வாழ முடியும் என்றால் தப்பில்லை
என்கிறது இன்றைய சமுதாயம்
இங்க மிருகத்தோல் போத்தி அலைகின்றோம் நாம்
தூங்கும் போது கூட ஒரு கண்ணை திறந்து கொண்டு தூங்காவிட்டால்
பிணம் என்று எரித்து விடுவார்கள்
இந்த நிலையில் ஒன்று மட்டும் நன்றாக புலப்படுகிறது
நாகரீகம் என்ற பேரில் நாம் செய்கின்ற அநியாயங்கள் எல்லாம்
நமக்கு திரும்பி வர போகிறது
எப்பொழுது என்பது மட்டுமே பதிலற்ற கேள்வியாய் நிற்கின்றது

வெள்ளந்தி குணம்

குழந்தை பருவத்தில் தொலைத்ததை இன்றும் தேடுகின்றேன்

சுகமான சுமைகள்

காலொடிந்த மனைவியை மூட்டையாக முதுகில் சுமந்து பிச்சை எடுக்கின்றான் கணவன்

இக்கணம் தேவை ஈர குணம்

சாலைகளில் அவசரம்
ரயிலை பிடிக்க அவசரம்
பேருந்தை பிடிக்க அவசரம்
இங்கு வரிசை கிடையாது எதற்கும்
சாலைகளில் இடத்திற்கு போட்டோபோட்டி
எப்படி ஒருவரை ஒருவர் முந்துவந்தென்று
ஆம்புலன்ஸ் வந்தாலும் வழி விடாத நம் ரத்தங்கள்
உள்ளே இருப்பது அவர் ரத்தம் என்றால் அப்படி செய்வீர்களா

அடுத்தவர் உயிர் என்பது
மயிருக்கு சமம் ஆயிட்டது
இந்த அவசர உலகில்
இன்று கூட ஆம்புலன்ஸ் வருவது தெரிந்தும்
வழி விட முன்வரவில்லை சில கார் ஓட்டுனர்கள்
திருந்துங்க டா சோறு திண்றீகளா  இல்லை வேற எதையாவது  திண்றீகளா

ஆணுறை விளம்பரம்

பல்பொருள் அங்காடியில் தன் மகனோடு தகப்பன்
இனிப்புகளை பார்த்தபடியே எல்லாவற்றையும் கேட்கும் மகன்
ஒரு கட்டத்தில் தரையில் அழுது புரண்டு அடம் செய்கின்றான்
தந்தை ஓரிடத்தில் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்

வாகன நிறுத்தம்

நான்கு சக்கர வாகனம் பழுதடைந்ததால் பஸ்சில்
போக வேண்டிய நிர்பந்தம்
பேருந்து நிறுத்தத்தில் ஒரு பிச்சைகாரன் அவன் வேலையில் மும்முரமாய்
கல்லூரி மாணவர்கள் அவர்களின் சினிமா விவாதத்தில் மூழ்கி கிடந்தனர்
யாரோ ஒருவர் எவரோடோ கைபேசியில் வணிகம் பேசிக்கொண்டிருந்தார்
பூக்காரி கர்ம சிரதையோடு பூ கட்டி கொண்டுரிக்க
போக்குவரத்து காவலர் லஞ்சவேட்டையில் திகைக்க
எவருக்குமே அங்கு இருந்த பூனைக்குட்டியின் தாயை காணும் என்ற தேடலை கவனிக்க நேரமில்லை

Wednesday, January 20, 2010

சொந்தத்தின் எதிர்பார்ப்பு

பெரியசாமி இறந்தார் இன்று
ஊரெங்கும் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்
கூரை வேய்ந்த வீட்டு வாசல்
சிதறி கிடக்கும் நாற்காலிகள்
தெரு முழுக்க உதிரி பூக்கள்
சோகம் கலையாத உறவினர் முகங்கள்
நடுவே துள்ளி ஓடி விளையாடும் சிறுவர்கள்
தாதா இறந்ததை அறியாத வயதில்
கருமாதிக்கு கரி சோறு இருக்குல்ல என்று வினவும் ஆர்வ கோளாறுகள் 
இப்பொழுது  தான் அருகில் வசிக்காத சொந்தங்களின் குசலங்கள்
இந்த இறப்பும் சொந்தங்களை நெருங்கி வரச்செய்யும் ஓர் சம்பவம்
நவீன வாழ்வில் சாவும் ஒரு சந்திக்கும் இடம் தூரத்து சொந்தங்களுக்கு
இது மாதிரி அடிகடி சந்திசிகிட்ட எவ்ளோ நல்ல இருக்கும் என்று நினைக்கும் நபர்கள்
இறந்தது அவர்கள் தந்தை என்று கூட நினைவின்றி

நிகர்நிலை பல்கலைகழகம்

இன்று அதன் நிலை எதற்கும் நிகர் இல்லை
ஏனென்றில் அது  நிலை குலைந்து விட்டது
கல்வியை காசாக்கிய கல்வி தந்தைகள் வாழ்க
காசு குடுத்து சீட் பெற்ற கனவான்கள் கதி இன்று அதோ கதி
மெரிட்ல சீட் வாங்கினோர் நிலை இன்னும் மோசம்
வணிகம் செய்ய பூவுலகில் ஆயிரம் வழி உள்ளது
விபச்சாரம் உள்பட
என் கல்வியை ஒரு உத்தியாய் பயன்படுத்துகிறார்களோ
ஆனால் ஒன்று நன்றாக தெரிகிறது
இந்தியாவில் காசு இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
பட்டம் அங்கீகரிக்க படாத மாணவர்களின் எதிர்காலம்
கல்வி தந்தைகளின் சுயநலத்தில் இன்று சூன்யமாக போய்விட்டது
வகுப்பறையை உடைப்பதனால் ஏது பயன் ?
ஆக மொற்றம் உங்கள் பெற்றோர்களின் காசு கரி
உங்கள் பட்டத்துக்கு நூல் கட்டி பறக்க விட்டுவிட்டார்கள்
விழிக்குமா மாணவர் சமுதாயம்?

Tuesday, January 19, 2010

எங்கோ நினைவு

குறுந்தகடில்  a r  ரஹ்மான் பாடல் ஒலிக்க

ஓரிடத்தில் நிற்காத மனம்
ஆபீஸ் பஸ்சில் பயணம்
வழி நெடுக வேலைக்கு செல்வோர் முகங்கள்
கவிதை எதாவது தோன்றுகிறதா என்று யோசனை
எதை பற்றி எழுதுவது
காதல் என்ற கடல் பற்றி விவாதிப்போமா
அளவிற்கு அதிகமாக வாசனை திரவியம் பூசிய பக்கத்து இருக்கை பெண்
பள்ளி நண்பர்கள்
வெகுநாள் கழித்து பார்க்கும் தோழி
நேற்றிரவு பார்த்த நெடுந்தொடர் பற்றி விவாதிக்கும் நண்பிகள்
இவ்வளவு பேரா நம் சிந்தனையை திசை திருப்புவதற்கு
மறுபடியும் கவிதை பற்றி நினைக்க நினைத்து தோற்று போனவுடன் தோன்றியது
அடடா மதிய சாப்பாடு எடுத்து வர மறந்துவிட்டோம் என்று

ஏக்கம்

மனதிற்கு தெரியாது அறிவின் எண்ணங்கள்
அறிவிற்கு எட்டாது மனதின் எண்ணங்கள்
எங்கு உதிக்கிறது எண்ணம் மனதிலா அறிவிலா
என் இடுகையை நாலு பேரு படிப்பாங்கன்னு மனசு சொல்லுது
அறிவு சிரிக்குது

பின்னூட்டம்

அன்பார்ந்த வாசகர்களே 
(நண்பர்கள் கூற்று: யாரு டா படிப்பாங்க உன்னோட இந்த கவிதைகள, நீ தான் இதை கவிதைனு சொல்லிக்கிட்டு திரியற)
என் இடுகையில் எழுத்துப்பிழை கண்டீர்கள் என்றால் தயவு செய்து சுட்டிகாட்டுங்கள்
பின்னூட்டமாக அளியுங்கள்
உங்களிடமிருந்து பூச்செண்டு கல் அழுகிய தக்காளி முட்டை எல்லாம் வரவேற்கபடுகிறது

எதை நீ யோசிகின்றயோ அதாகவே மாறுகின்றாய்

கவிதைகளுக்கும் இரவுக்கும் என்ன தொடர்பு
அதிகாலையில் பிறக்கிறது மூளையில் மனதில் நிறைய சிந்தனை
குவித்து வைக்க இடமில்லை
எழுதி தீர்க்க நேரமில்லை
எலி  போட்டியில் சிக்கிய படி அந்த நாளுக்கான அவசரத்தில் மூழ்குகின்றேன்
முங்கி வெளியே வரும் போது சிந்தை காய்ந்து ஓய்ந்து தேய்ந்து
வறண்ட நிலம் போல கட்சி தருகின்றது
நீரூற்ற நினைத்தால் ஒருமனதாக்க பெரும் பாடு
எண்ணற்ற சிந்தனை வந்து செல்கின்றது
இதோ எதையோ பதிய நினைத்து எதையோ பதிந்து கொண்டிருகின்றேன்
கன்னம் வருடியபடி
எங்கு ஆரம்பித்தேன் என்று நினைப்பதற்குள் ஆயிரம் கோடி நினைவுகள்
வந்து ஓடிக்கொண்டு தான் இருகின்றது
ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டால் அப்பொழுது தான் நினைவிற்கு வருகிறது
நேற்றிரவு நன்றாக உறங்கியது
தூக்கம் கெடுத்து தான் கவிதை வரயனுமா என்ற யோசனையில் முற்று புள்ளி வைக்கின்றேன்
அனைவருக்கும் நல் இரவு

மன்னிப்பு

நான் பச்சை மரத்தில் அடித்த ஆணிகளை நீக்கி பார்க்கும் பொழுது
உலகம் தெரிகிறது அந்த ஓட்டையில்
பச்சை மரங்களிடம் நான் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கின்றேன்
இனி ஒரு சுடு சொல் சொல்ல மாட்டேன்
எல்லோரிடமும் எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்த ஆயத்தமாகிறேன்
பழைய நினைவுகள் வந்து சென்றாலும்
சொல்லாலோ செயலாலோ சுட்டது சுட்டதுதான்
காயத்திற்கு மருந்து அன்பு மட்டுமே
நான் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளுக்கு அடிமனதிலிருந்து மன்னிக்க வேண்டுகிறேன்

இறைவன் மிக பெரியவன்

அல்லா இயேசு சிவன் இவர்கள் எல்லோரும் நம் வாழ்வில் வந்து
நமக்கு நல்ல மனதை தரட்டும்
எல்லோரும் நன்றாக இருக்க பிரார்த்தனை செய்வோம்
எல்லா மதங்களையும் மதிப்போம்
பாதைகள் வேறு சேருமிடம் ஒன்று
அன்பு கொண்டு அந்த பாதையில் பயணிப்போம்

வீட்டு சாமி

வீட்டு சாமி கும்பிடாயிற்று
ஷீலா மீனும் வறுவலும்
மிளகு சிக்கன் மணக்க
மட்டன் சுக்கா சுவைக்க
மனம் மகிழ மீன் குழம்பும்
பிரியாணி சோறும்
இறந்த முன்னோர்களுக்கு படைத்தது
அதை நாங்கள் சுவைத்து
உண்ணும் பொழுது எங்கள் எல்லோர்க்கும் ஓர் நினைப்பு
நம்பளும் வீட்டு சாமி ஆனா இப்படி விமரிசையா
செய்வாங்க இல்லை

சில கதவுகள் தட்டினால் திறக்காது உடைக்கவேண்டும்

முத்துபாண்டி , யூனியன்  செயலாளர் , விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களுக்கு
அய்யா இது போன்ற முயற்சியை மென்மேலும் மேற்கொள்ளுங்கள்
உங்கள் முயற்சிகள் வெற்றி அடைய என் வாழ்த்துகள்

விருதுநகர் - ஓர் அவலம் நடந்தது இன்று

விருதுநகர் - விருதை தயவு செய்து திருப்பி கொடுத்து விடவும்
இன்று நடந்த அசிங்கத்திற்காக உங்கள் ஊர் பெயரிலிருந்து விருது என்ற வார்த்தையை நீக்கவும்
மிஞ்சுவதோ நகர் மட்டும் தான்
காமராஜர் வாழ்ந்த ஊரில் இந்த அவலம் நடந்தேறியது என்று நினைக்கையில்
மிகவும் வருத்தமாக இருக்கிறது

நான் எல்லோரையும் ஒட்டுமொத்தமாக குற்றம் கூற வில்லை
இந்த ஊரில் நல்லவர்களும் இருகின்றார்கள் உங்கள் பார்வைக்கு இந்த இடுகை

பஞ்சம்மாள் தாக்கப்பட்டார்

 உளுத்திமடை கிராமத்தில் கோவிலில் நுழைய முயன்ற
7  பக்தர்கள் தாக்கப்பட்டனர்
நீங்க யாரு டா கோயிலுக்குள்ள இன்னார் தான் வரலாம்னு சொல்வதற்கு
சாமி எல்லார்க்கும் பொது
எப்படி சூரியன் சந்திரன் காத்து மழை பொதுவோ அதே மாதிரி தான் டா
சாமியும்
இந்த அவலத்தை நினைத்து வெட்கப்படுகின்றேன்
அசிங்கமா இல்லை உங்களுக்கெல்லாம்
கோவிலுக்குள்ள வரவங்க மதத்தினை பாரேல்
மனிதரா என்று மட்டும் பாரும்
இதெல்லாம் பாக்கும் போது கடவுள் இருக்கானானு சந்தேகம் வருது
பஞ்சம்மாள் சீக்கிரம் குணமடைய கடவுளை பிரார்த்திப்போம் 

Monday, January 18, 2010

அட தூ

என் சொல்வேன்
புழுதியற்ற காற்று
ஒழுங்காக வாகனம் செலுத்தும் அன்பர்கள்
மீட்டர் போடும் ஆட்டோ
லஞ்சம் கேக்காத போலீஸ்
தலை சொறியாத அரசாங்க ஊழியர்
கார் ஒழுங்காக ஓட்டும் கால் செனட்டர் டிரைவர்கள்
பெண்களை கிண்டல் செய்யாத வாலிபர்கள்
நேரத்துக்கு வரும் நகரப்பேருந்து
தமிழில் பேசினால் மரியாதை
சாலையில் எவரையும் பயமுறுத்தாத ஸ்கார்பியோ வாகனங்கள்
நேர்மையான அரசியல்வாதி
அடடா என் அம்மா என்னை எழுப்பிவிட்டாள்

எங்கள் பாலகுமார் மாமாவும் கவிஞர் தான்

அறிவுரை என்பது விளக்கெண்ணை மாதிரி
குடுப்பது எளிது
குடிப்பது கடினம்
- கடன் வாங்கிய கவிதை
   நன்றி பாலகுமார் அவர்கள்

பசி

தனி ஒருவருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம்
என்று கூக்குரல் இட்டான் பாரதி
இன்றோ உணவாலே எல்லோரும் சாகும் அபாயம்
உணவே மருந்து என்றிறந்து போய்
மரபு மாற்றம் செய்த கத்தரி முதல் கோழி வரை இன்று
எதை தின்றாலும் அவதி தான்
இயற்கை என்பதை மனிதன் மறந்ததன் விளைவு தான் இவை

Friday, January 15, 2010

எங்கே தமிழன்?

தமிழ்  நாடு  போல் இங்கு வேறு இல்லை
தமிழன் என்பதற்காக இல்லை இந்த குறிப்பு
இது வந்தாரை வாழவைக்கும் தலம்
ஏனென்றால் இங்கு ஏமாளிகள் ஏராளம்
ஏறி மிதிபவர்கள் தாராளம்
உரிமைக்கு குரல் குடுக்க யோசிக்கும் இனம் இது இன்று
ஏனெனில் ஒற்றுமை இல்லை இங்கு
சாதி மத பிளவுகள் உண்டு பல
குடி தண்ணீருக்கு அடித்து கொள்ளாமல்
ஜாதிக்கு அடித்து கொள்பவர்கள் ஆனா நிலை வருத்தம்
அவரவர் வாழ்வில் பிரச்சனை இல்லெனில் இங்கு யாவரும் நலம்
பொது பிரச்சனை எனில் அடடா எல்லோரும் மாயம் 
நாம் எவ்வளவு சுயநல வாதிகள் ஆகி விட்டோம் என்பதை
பறைசாற்றுகிறது இது
வந்தேறிகள் இங்கு பல உண்டு
அட்டைகள் போல இந்த மண்ணிலிருந்து அத்தனையும் உறிந்து எடுத்துவிட்டார்கள் 
வாழ வைத்தது தமிழனும் அவனது பண்பும்
வாழ மறந்தான் தமிழன்
அடுத்தவருக்கு எடுப்பாய் இருந்தே ஒழிந்தான்
எடுப்பார் கைபிள்ளையாய் வாழாமல் இருகின்றான்
இங்கு நல்லதோர் பாதைகாட்டி இல்லை
அறிவுக்குருடர்களும் தற்குறிகளும் மிதமிஞ்சி உள்ளனர்
இந்நாள் நடிகர் முதல் முன்னாள் முதல்வர் வரை
இங்கு எவனும் தமிழன் அல்ல
பச்சை மஞ்சள் கருப்பு என்று தமிழனுக்கு
அடையாளங்கள் காட்டும் சிலரால்
அவமானத்தில் இன்று தமிழ் இனம்
தமிழ் என்பது இனமே அல்ல இது ஒரு வாழ்கை வழி
இப்படி தான் உயிர் வாழ வேண்டும் என்று உலகிற்கு எடுத்துக்காட்டிய
முதல் நாகரீகம் கொண்டது நம் தமிழ் மக்கள்
இன்று உண்மையான தமிழனை
எங்கே தேடுவது என்று தான் தெரியவில்லை
எங்கே தமிழன்?

யாவரும் இங்கு நடிகர்கள்

இங்கு இருப்போர் அனைவருக்கும்
இரண்டு முக்கியமான வேலை
ஒன்று உலகத்திற்கு நன் முகத்தை காட்டுவது
இரண்டு இவ்வுலகிற்கு தன் தீய முகத்தை மறைப்பது

ஆசை துன்பத்திற்கு அடிக்கல்

ஆசை படமால் இருப்பதென்ன தியாகமா?
அதுவும் ஆசை தான டா

புனலின் கண்ணீர்

நான் மயிருக்கு தான் மதிக்க படுகின்றேன்
ஆடிபெருக்கு போது நான் தேவை
மற்ற நாளில் நான் கழிவுகளுக்கு வீடாய் இருக்கின்றேன்
என்னை பேணி பாதுகாக்க இங்கு யாரும் இல்லை
கடைசி துளி வரை உறிந்து எடுத்த பிறகும் 
என்னடியில் இருக்கும் மண்ணை கூட விடுவதில்லை
இந்த மானம் கெட்ட மனிதர்கள்
நதி எங்கே செல்கிறது
இப்பொழுதாவது சென்று கொண்டிருகிறது
பின்னொரு நாளில் இங்கே நதி பாய்ந்து கொண்டிருந்தது என்று
பலகை வைத்து வரலாறு ஆகி விடும் அபாயம்

ஞாயிறும் மறையும்

ஞாயிற்றை கை மறைப்பார் இல்

இன்று கிரகணம் சிறப்பாக நடந்து முடிந்தது

நினைவுகள்

எங்கோ ஒலிக்கும் பாடல்
பிடித்த படம்
அழகாய் ரசித்த காட்சி
கண்முன்னே நிற்குதடி
இன்று கூட உன் நினைவு வந்து போயிற்று
ஏனென்று தெரியவில்லை
காரணம் தேட நான் ஸ்ரமபடவில்லை
நினைவின் தேய்வு வாழ்வின் தொய்வு
நாம் நினைத்தபடி போவதல்ல வாழ்க்கை

காரி

கன்னத்தில் ஈரம்
கண்ணாடி முன் நின்றதால்
மனசாட்சி செய்வதறியாது செய்தது 

என்ன கலர்

பகுத்தறிவுக்கு மஞ்சள் கலர்
பகுக்காத அறிவுக்கு பச்சை கலர்
நம்பி மோசம் போனவர்களுக்கு ரெண்டு கலர்
நடுவுல ஆரஞ்சு சைடுல வெள்ளை
இதுக்கு பெயர் நாமம்

Thursday, January 14, 2010

இந்த நொடி

இந்த நொடி கருவுற்று இருக்கிறது  வாய்ப்புகளோடு
இதை நாம் எப்படி எதிர்நோக்குகிறோம் அதுவே நமது நாளையை
தீர்மானிக்கும்
இந்த நொடியை விட்டுவிட்டு நாளையை பற்றி புலம்பல்கள் தவிர்ப்போம்
இந்த நொடியின் முக்கியதுவோம் அறிந்து செம்மையாக செயல்படுவோம்
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
போன காலம் வராது
பொழுது போனால் கிடைக்காது

Tuesday, January 12, 2010

அறிவு சுடரின் அறைகூவல்

நான் எப்பொழுதும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றேன்
எனக்கு எண்ணெய் ஊற்றுவது உங்கள் பொறுப்பு
நான் உங்கள் எல்லோரக்குள்ளும் வசிக்கின்றேன்
என்னை தூண்டுவது உங்கள் இஷ்டம்
உங்கள் மனம் போன போக்கில் நீங்கள் போனால் நான் வெகு விரைவில்
அணைந்து விடுவேன்
உங்கள் ஆன்மாவில் வசிப்பவன் நான்
என்னை பரம்ஜோதியாய் சுடர் விட்டு வளர்ப்பதும்
குளிர வைப்பதும் உங்கள் கையில்
குடத்திலிட்ட விளக்கல்ல நான்
பார்த்துகொள்வீரா

புதியதோர் உலகம்

இதோ நாங்கள் வந்துவிட்டோம்
 ஒவ்வொரு நிமிடமும் முயற்சிகள் கருவுற்று இருக்கின்றன
திக்கெட்டும்  எங்கள் தேடல்கள் பரவும் அறிவிற்காக
இருளை இருளாக்குவோம் அறிவு சுடர் ஏற்றுவதற்காக
வேற்றுமை களைவோம் பகமை மறவோம்
புதிய பாதை தேடுவோம்
ஆயிரம் தொழில் மாண்புற செய்வோம்
கல்வி கற்போம் கற்பிப்போம்
இங்கு கூடு முயற்சி பல கண்டு வெற்றி அடைவோம்
நாம் என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் அளிப்போம்
அண்டங்கள் தோறும் உலாவுவோம்
நட்புகள் பல தேடுவோம்
ஆண் பெண் பேதம் மறப்போம்
எல்லோரும் இங்கு ஒன்று என்ற வேதம் செய்வோம்
ஒன்று சேர்ந்தால் உண்டு இங்கு ஆயிரம் சொந்தம்
நாம் இந்த உலகத்தை வெல்ல இனி வேறு என்ன வேண்டும்

Sunday, January 10, 2010

கருணைக்கொலை

அகதிகளாய் வாழும் மனிதர் தம் வாழ்வு செழிக்க
வழி தேடி பிழைக்க
வந்தாரை வாழ வைக்க
வக்கு இல்லை வந்த இடத்தில்
இதற்கு அவர்கள் சொந்த மண்ணில்
உயிர் துறப்பது மேல்
பகைவரிடமும் அன்பு செலுத்தும் இனம் நம் இனம்
இன்று சொந்த சகோதரர்கள் வாடும் பொழுது
இரு கரம் நீட்ட துப்பு இல்லாமல் போனதேனோ
இதற்கு ஒரு துளி விஷம் அவர்களுக்கு அன்போடு குடுத்து விடுங்கள்
மானத்தோடு அவர்கள் உயிர் பிரியட்டும்

புதிய வருடத்திற்கான உறுதிமொழி

புதிய வருடத்திற்கான உறுதிமொழி
இனி ஒரு விதி செய்வோம்
அன்பு செலுத்துவோம்
மனிதனை மனிதனாய் மட்டும் எதிர்நோக்குவோம்
ஜாதி, இனம், மதம், நிறம் களைவோம்
நேயத்தை மனிதனிடம் கொண்டு செல்வோம்
மிருகத்திடம் அன்பு காட்டுவோம்
புதிய முயற்சிகள் மேற்கொள்வோம்
வாய்மை பழகுவோம்
பழக வேண்டிய ரௌத்ரம் கற்போம்
தலை நிமிர்ந்து நடப்போம்
உலகை புதிய பார்வையில் நோக்குவோம்
பயணம் பல மேற்கொள்வோம்
அறியாமை போக்க படிப்போம்
இன்றே கடைசி போல் வாழ்வோம்
இந்த நொடியை உணர்ந்து வாழ்வோம்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

தோன்றுகிறது சில சமயம்

பழைய நட்பு
பிரிதலின் பேரில் உருவாகும் இடைவெளி
நட்பின் அடையாளத்துக்கு ஒரு கண்ணீர்த்துளி
பள்ளி இறுதி ஆண்டு முடியும் தருவாயில்
உறவுகளுக்கு பிரியா விடை கொடுத்து
நகர்ந்து மெல்ல செல்லும் நாள் - farewell டே
எங்காவது எப்பொழுதாவது சந்திக்கும் பொது
நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும்
அந்த பழைய நினைவுகள்
எங்கள் பள்ளி கடைசி பெஞ்சில்
 நாங்கள் உலகை பற்றி கவைல்யின்றி கழித்த நாட்களை
நினைவு கூறும் பொழுது
 கண்ணில் நீர்த்துளி
தோன்றுகிறது சில சமயம்
வளராமல் இருந்திருக்கலாம் என்று

மாணாக்கரின் ஆபத் பாந்தவன்

பள்ளி செல்லும் மாணவர்களிடம் இப்போதைய favorite ஹீரோ
ரமணன்
அவர் t v -இல் தோன்றினால் மறு நாள் விடுப்பு

பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டோவில் வாசகம்

பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டோவில் வாசகம்


 சிரிக்கும் பெண்ணை நம்பாதே! சீரும் பாம்பை நம்பு!

வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை
 இப்போதெல்லாம் ரமணன் கூட தெய்வம் தான்
மழையை சென்னைக்கு கொண்டு வந்து
ஐந்து நாள் டெஸ்ட் போட்டியை டிரா செய்ய
 கிரிக்கெட் அணியை விட
மக்கள் நம்புவது ரமணனை
சென்னையில் போட்டி நடந்தால் !

Saturday, January 9, 2010

இந்தியனுக்கு எங்க டா இந்தியா

தமிழனுக்கு தமிழ் நாடு
தெலுங்கனுக்கு தெலுங்கானா
இந்தி காரனுக்கு டில்லி
மராட்டியனுக்கு பம்பாய்
இந்தியனுக்கு எங்க டா இந்தியா

மீண்டு வருதல்

நாய் குட்டி
 துள்ளி ஓடிய குட்டி நாயின் மீது ஒருவன் வாகனம் ஏற்றி சென்றான்
 அலறியது நாய் குட்டி
அவனுக்கு அவசரமோ அல்லது நாயின் கவனமின்மையோ
எதுவாக இருந்தாலும் அதை சட்டை செய்யாமல்
மனம் பதைத்தது அவனை மனமார வாஞ்சையோடு விலைமகள் மகனே என்று
வசை பாடி ஓய்ந்த போது நிசப்தம்
தெருவில் அனைவரின் கண்கவர் பொருள் ஆனேன் அந்த நொடி 
நாயின் ஓசை அடங்கி மீண்டும் துள்ளி எழுந்தது
மீண்டும் அவரவர் அவர்களின் பணியில் மூழ்கினார்கள்

மென்பொருள் தொழிலாளரின் அறியாமை

மென்பொருள் தொழிலாளரின் அறியாமை
என்ன டா வேலை இது.....என்று புலம்புவர்களில் நீங்களும் ஒருவரா?
இந்த பொழப்புக்கு கூலி வேலை பாக்கலாம் என்று கூறுவார்கள்
அனால் அவர்களுக்கு தெரியாது அவர் ஒரு தின கூலி என்று.

திருப்பு முனை

திருப்பு முனை

தூரத்து பச்சை
திரும்பும் திசை எல்லாம் சந்தர்ப்பம்
நம்பிக்கையின் பேரில் அடி மேல் அடி எடுத்து வைக்கும்அனைவர்க்கும்

விடியலை தேடி அலைகின்ற ஒவ்வொருவர்க்கும்
திடீர் என்று சொல்லாமல் தொட்டு தொடரும்
அனால் இவை அனைத்திற்கும் முதல் படி உழைப்பு
இது இல்லையேல் வரும் ஆனா வராது

ஜனனம்

ஜனனம்:
ஆணுக்கு பத்து நிமிடம்
பெண்ணுக்கு அது வாழ்க்கை

performance appraisal

மேலதிகாரியின் மூளைசலவை
நீ செய்ததை சிறுமைபடுத்தி தவிடுபொடியாக்கும் க்ஷணம்
இதற்கு பெயர் அப்பரைசல் அல்ல ஆப்ரைசல்.

தற்கொலை


வாழ்வாங்கு வாழ்ந்து வையத்துள் செழிபதற்கு 
வக்கற்றவர்கள்வீழ்ந்து மடிந்து மாண்டு போவதற்கு
முதுகெலும்பு இல்லாத கோழைகள் 
நீங்கள் மற்ற கோழைகளுக்கு வழி காட்டிகள்
வெட்ககேடு உங்களை பற்றி எழுதிய இந்த கவிதை 
போய் சாவுங்கடா