என் பள்ளி நண்பன்
நுழைவு தேர்வு எழுதி முடித்த கையோடு
சென்றோம் குதூகலிக்க
அவன் நித்திரையில் இருந்தான்
இல்லம் சென்று எழுப்பியவன் நான்
அவனை கலையாத நித்திரைக்கு அனுப்ப
சென்றோம் கடற்கரைக்கு
சென்றனர் என் நண்பர்கள் விளையாட
நான் அவர்கள் உடைக்கு பாதுகாவலனாக இருந்தேன் கரையில்
சென்றது மூன்று பேர் வந்ததோ இரண்டு பேர்
தேடினோம் அரவிந்தை அன்று மாலை முழுக்க
அவன் சடலம் துறைமுகம் அருகே கரை ஒதுங்கியது
மறு நாள் ஈம சடங்கின் பொழுது அவன் தந்தையின் நண்பர் சொன்னார் கூட்டத்தில்
அது எப்படி ஒருத்தன் மட்டும் கரையில இருந்தான்
நல்ல திட்டம் போட்டிருகானுங்க என்று
எனக்கு தான் தெரியும் என் உணர்வுகள்
அவன் எனக்கென இருந்த உன்னத நண்பர்களின் ஒருவன்
இன்றோடு அவன் இறந்து ஓடி விட்டது பல வருடங்கள்
மாறவில்லை குற்ற உணர்ச்சி
அன்று அவனை சென்று எழுப்பியிருக்ககூடதோ
No comments:
Post a Comment