சாலை ஓரத்தில் குஷ்ட ரோகி பிச்சைகாரன் உதவி செய்ய மனமில்லாமல் வேடிக்கை பார்க்கும் மக்கள்
கல்லூரி பெண்களிடம் பேருந்து நிறுத்தத்தில் கிண்டல் கேலி செய்யும் கம்மனாட்டிங்க
அலுவுலகதுக்கு செல்லும் அவசரத்தில் ஓட்டுனர் உரிமம் எடுத்து வர மறந்த ஆளிடம் லஞ்சம் கேட்கும் காவல் ஊழியர்
ரத்தம் கொதித்தது இவர்கள தெருவில் ஓட விட்டு சுட வேண்டும் என்று தோன்றியது
சடாலென்று பின்புறத்திலிருந்து செவியை கிழிக்கும் வாகனங்கள் ஒலி எழுப்பின
அடடா சிவப்பு எப்போது பச்சைக்கு மாறியது ?
பின்னொரு நாளில் நினைத்து பார்க்கும் பொழுது செவிட்டில் அறைந்தது போன்றிருந்தது
No comments:
Post a Comment