இந்த கவிதையை எவ்வளவு பேர் படிப்பார்கள் என்ற கவலையில்
தோன்றிய நினைப்புகள் கூட மெல்ல மறந்து மறைந்து செல்கின்றன
வாழ்கை இவ்வளவு சிக்கலானது
எப்போது என்று மோட்டுவளையை சற்று உற்று
பார்க்கும் பொழுது காதில் ஒலிக்கிறது
"வீடு சுத்தம் செய்யனும் இந்த வார கடைசியில்"
இந்த எண்ணத்தை கூட
ஒரு நிமிடம் தாங்கி பிடிக்க முடியாத நிலையில்
இன்று நாம் எல்லோரும்
கவலைபடுவோம் எதை பற்றியும் கவலைபடாமல்
No comments:
Post a Comment