இந்த கவிதையை எவ்வளவு பேர் படிப்பார்கள் என்ற கவலையில்
தோன்றிய நினைப்புகள் கூட மெல்ல மறந்து மறைந்து செல்கின்றன
வாழ்கை இவ்வளவு சிக்கலானது
எப்போது என்று மோட்டுவளையை சற்று உற்று
பார்க்கும் பொழுது காதில் ஒலிக்கிறது
"வீடு சுத்தம் செய்யனும் இந்த வார கடைசியில்"
இந்த எண்ணத்தை கூட
ஒரு நிமிடம் தாங்கி பிடிக்க முடியாத நிலையில்
இன்று நாம் எல்லோரும்
கவலைபடுவோம் எதை பற்றியும் கவலைபடாமல்
என் சிந்தனை குவியலின் தொகுப்பு இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Thursday, February 25, 2010
Sunday, February 21, 2010
Wednesday, February 17, 2010
குற்ற உணர்ச்சி
என் பள்ளி நண்பன்
நுழைவு தேர்வு எழுதி முடித்த கையோடு
சென்றோம் குதூகலிக்க
அவன் நித்திரையில் இருந்தான்
இல்லம் சென்று எழுப்பியவன் நான்
அவனை கலையாத நித்திரைக்கு அனுப்ப
சென்றோம் கடற்கரைக்கு
சென்றனர் என் நண்பர்கள் விளையாட
நான் அவர்கள் உடைக்கு பாதுகாவலனாக இருந்தேன் கரையில்
சென்றது மூன்று பேர் வந்ததோ இரண்டு பேர்
தேடினோம் அரவிந்தை அன்று மாலை முழுக்க
அவன் சடலம் துறைமுகம் அருகே கரை ஒதுங்கியது
மறு நாள் ஈம சடங்கின் பொழுது அவன் தந்தையின் நண்பர் சொன்னார் கூட்டத்தில்
அது எப்படி ஒருத்தன் மட்டும் கரையில இருந்தான்
நல்ல திட்டம் போட்டிருகானுங்க என்று
எனக்கு தான் தெரியும் என் உணர்வுகள்
அவன் எனக்கென இருந்த உன்னத நண்பர்களின் ஒருவன்
இன்றோடு அவன் இறந்து ஓடி விட்டது பல வருடங்கள்
மாறவில்லை குற்ற உணர்ச்சி
அன்று அவனை சென்று எழுப்பியிருக்ககூடதோ

அரவிந்த்
எனக்கு வாழ்க்கையில் நிறைய நண்பர்கள்
அதில் குறிப்பாக அரவிந்த் என்ற பெயருடன் என்னோடு பள்ளியில்
படித்தவர்கள் இருவரும் இன்று இல்லை
ஒருவன் அலையோடு சென்றான்
இன்னொருவன் வாகன விபத்தில் சென்றான்
மீதம் இருக்கும் அரவிந்துகளே பத்திரமாக இருங்கள்
என் ராசி அப்படி

Tuesday, February 16, 2010
குற்றம் நடந்தது நன்றாக
இந்த ராக்கிங் என்ற கொடுமை என்று தான் தீருமோ
பிளாஸ்டிக் போன்று இதுவும் லேசில் அழியாது போல
உன்னால் ஒரு சக மாணவனை அல்லது உனக்கு பின் வரும் மாணவர்களை
மதிக்க தெரியவில்லை என்றால் அது உன் குற்றமல்ல உன் பெற்றோரின் குற்றம்
பாவம் அவர்களுக்கு நல்லது சொல்லி வளர்க்க தெரியவில்லை
இங்கு நானும் குற்றவாளி தான்

Monday, February 15, 2010
கத்தி......புத்தி
தமிழனுக்கு இந்த இரண்டும் நன்கு பரிச்சயம்
அடுத்தவன் சொல்லும் புத்தியை கேட்பது
பழக்கத்துக்காக கத்தியை அறிவில்லாமல் தூக்குவது
எப்பொழுது திருந்த போகிறோம் நாம்?
அடுத்தவன் சொல்லும் புத்தியை கேட்பது
பழக்கத்துக்காக கத்தியை அறிவில்லாமல் தூக்குவது
எப்பொழுது திருந்த போகிறோம் நாம்?
முத்தம்..........முதல் முத்தம்
அந்த ஈரம் சஹாரா பாலைவனத்தின் நடுவில் இருக்கும் நீர்
அதன் வெளித்தோற்றம் சீக்கிரம் மறையும்
ஆனால் எப்பொழுதும் நினைவில் இருக்கும்
நீரும் சரி முத்தமும் சரி
விவரிக்க முடியாதது பரப்பில்
அதன் வெளித்தோற்றம் சீக்கிரம் மறையும்
ஆனால் எப்பொழுதும் நினைவில் இருக்கும்
நீரும் சரி முத்தமும் சரி
விவரிக்க முடியாதது பரப்பில்
ஏதோ நினைவு
சாலை ஓரத்தில் குஷ்ட ரோகி பிச்சைகாரன் உதவி செய்ய மனமில்லாமல் வேடிக்கை பார்க்கும் மக்கள்
கல்லூரி பெண்களிடம் பேருந்து நிறுத்தத்தில் கிண்டல் கேலி செய்யும் கம்மனாட்டிங்க
அலுவுலகதுக்கு செல்லும் அவசரத்தில் ஓட்டுனர் உரிமம் எடுத்து வர மறந்த ஆளிடம் லஞ்சம் கேட்கும் காவல் ஊழியர்
ரத்தம் கொதித்தது இவர்கள தெருவில் ஓட விட்டு சுட வேண்டும் என்று தோன்றியது
சடாலென்று பின்புறத்திலிருந்து செவியை கிழிக்கும் வாகனங்கள் ஒலி எழுப்பின
அடடா சிவப்பு எப்போது பச்சைக்கு மாறியது ?
பின்னொரு நாளில் நினைத்து பார்க்கும் பொழுது செவிட்டில் அறைந்தது போன்றிருந்தது

Sunday, February 14, 2010
காதலர் தின வாழ்த்துகள்
இந்த மண்ணில் அன்பு செழித்திட பகைமை மறந்திட
வேற்றுமை களைந்திட ஒற்றுமை ஓங்கிட
செய்வோம் இங்கு காதல் பெண்களிடத்தில் மட்டுமல்லாது
தாய் தந்தை உறவுகள் நண்பர்கள் மிருகங்கள் செடி கோடி
எல்லாவற்றின் மீதும்
இருக்கும் நாட்களில் என்ன செய்கிறோம் பெரிதாக
இன்று முதல் எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்துவோம்
வாழ்க மனித நேயம் வளர்க உறவுகள்
ஜெய் ஹிந்த்

Saturday, February 13, 2010
நம்ப ஜனம்
தமிழ்ப்படமும் பாக்கும் இதுக்கு அடுத்து
அசல் வட்டி குருவிக்காரன் பிச்சைகாரன் இப்படி ஏது வந்தாலும்
பாக்கும்
தற்குறி தானே அவனுக்கு என்ன தெரியும் ஏது நல்லது ஏது கெட்டதுன்னு
அம்புட்டு வெள்ளந்தி நம்ப பயலுவ
அட தூ
அசல் வட்டி குருவிக்காரன் பிச்சைகாரன் இப்படி ஏது வந்தாலும்
பாக்கும்
தற்குறி தானே அவனுக்கு என்ன தெரியும் ஏது நல்லது ஏது கெட்டதுன்னு
அம்புட்டு வெள்ளந்தி நம்ப பயலுவ
அட தூ
Friday, February 12, 2010
ஓர் புதிய முயற்சி
இன்று இறப்பது போல் வாழ்வோம்
இன்றே கடைசி நாள் போல உழைப்போம்
பிறர் மனதில் இறந்த பின்பும் நிலைப்போம்
இது தான் உண்மையான வாழ்வுக்கு சான்று
நாளை இல்லை என்று நினைவில் வைத்து இன்றே எல்லாவற்றுக்கும் ஆசை படுவோம்
நமது எண்ணங்களும் செயல்களும் ஒன்றென கலந்து கரை சேருவோம்

Thursday, February 11, 2010
நானும் பீனிக்ஸ் பறவை ஆனேன்
மீண்டு வந்தேன் இன்று மறுபடியும் இந்த இடுகையில்
என் சிந்தனை குவியல்கள் குவியும்
இந்த இடைவெளி bsnl க்கு என் நெஞ்சார்ந்த நன்றி
வாசகர்களே யாரவது இருக்கீங்களா
நாளை முதல் புதிய முயற்சி கணைய சுழற்சி
நல் இரவு
என் சிந்தனை குவியல்கள் குவியும்
இந்த இடைவெளி bsnl க்கு என் நெஞ்சார்ந்த நன்றி
வாசகர்களே யாரவது இருக்கீங்களா
நாளை முதல் புதிய முயற்சி கணைய சுழற்சி
நல் இரவு
Monday, February 8, 2010
Subscribe to:
Posts (Atom)