என் மகளுக்காக
அவளின் மழலை பேச்சுக்காக
அந்த சிறு கை கால் அசையும் அழகிற்காக
மாசு மறுவற்ற உள்ளத்திற்காக
சிரித்தும் அழுதும் செய்யும் சேட்டைகளுக்காக
இந்த உலகில் இந்த நிமிடத்தில் இதை விட வேறு பெரியது
எதுவும் இல்லை என்று தான் தோணுகின்றது
இந்த மழலை பருவத்தை மீண்டும் ரசித்து அனுபவிக்க
நானும் சிறு பிள்ளை ஆகின்றேன்
No comments:
Post a Comment