எவ்வளவு நேரம் தான் இணையத்தில் உலாவுவது
கவிதை யோசிப்பது
வெள்ளை பீடி கரைந்து புரண்டோடுகிறது
நேரத்தை கொல்ல கிடைத்த அஸ்திரங்கள் எல்லாம் எய்தி ஆயிற்று
இருந்தும் கொன்றது சில மணிகளே
ஒரு வெறுமை எங்கிருந்தோ வீடு வந்து சேர்ந்ததும் ஒற்றிக்கொள்கிறது
கொல்கிறது
இதை தான் பசலை நோய் என்று சொல்வார்களோ?
வீடு தோறும் ஒரு நிசப்தம்
யோசித்து பார்க்கும் பொழுது நாம் விரும்பும் விரும்பிய நபர்களை
நினைத்து பார்க்க இது ஒரு சந்தர்ப்பம்
ஆனால் இதற்கு விலை என் சந்தோஷம் என்று நினைக்கும் பொழுது
மெல்ல படுக்கையறை கண் முன் தோன்றுகிறது
நித்திரை தனிமையின் எதிரி தனித்திருப்பவர்களுக்கு
நல்லதோர் நண்பன்
No comments:
Post a Comment