வரிசையில் வர தெரியாது
அலைபேசியில் மெதுவாக பேச தெரியாது
சாலை விதிகளை மதிக்க தெரியாது
விபத்தில் சிக்கியவரை உதவத்தெரியாது
மென்மையாக பேச தெரியாது
சுமூக உறவு எவருடனும் கிடையாது
டாஸ்மாக் திறந்தவுடன் முண்டியடிக்க நன்றாக தெரியும்
மூடப்பழக்கங்கள் அனைத்தும் அத்துப்படி
மிருகங்களிடம் நேசம் கிடையாது
பெரியவர்களிடம் மரியாதை தெரியாது
லஞ்சம் குடுக்க வாங்க தெரியும்
வெட்டி பேச்சில் வீரர்கள்
உண்மையான பிரச்சனை என்றால் ஒதுங்கும் கோழைகள்
வெட்டி பந்தா செம்மையாக செய்பவர்கள்
அடுத்தவர்க்கு ஆப்பு வைக்கும் கலை கண்டவர்கள்
இதற்கு பேர் ஒரு சமுதாயம்
இதற்கு வண்டலூர் மிருக காட்சி சாலை எவ்வளவோ மேல்
No comments:
Post a Comment